25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கோடைக்காலசரும அரிப்பை போக்க…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடைக்காலசரும அரிப்பை போக்க…

வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகம் எங்கும் அரிப்பும் எரிச்சலும் தோன்றக்கூடும் இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.

தேங்காய்எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல்அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும்முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில்தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்

ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம்,கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும்.

 ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.

முகத்தை வெறும்தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரைமுகம், கழுத்து, கை, கால்களில் தடவிவிடவும்.15 நிமிடம் கழித்து முகம்மற்றும் கை, கால்களை சோப்புபோட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.

ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும்.15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News